வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 11:39AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா – நியூசிலாந்து இடையேயான விரிவான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார உத்திசார் நடவடிக்கையாகவும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் வலுவான செயல்பாடுகளை குறிப்பதாகவும் அமைந்துளள்து.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகள் எட்டும் நோக்கில் மிக விரைவாக இந்த தடையற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கப்பட்ட இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் திரு டாட் மெக்லே இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த வர்த்தக உடன்படிக்கை, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜவுளி, மருந்துகள், தோல் பொருட்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் வகை செய்கிறது.
அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதத்துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்கள் சர்வதேச அளவில் சிறந்த அனுபவங்களை பெறும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும் படிப்பிற்கு பிந்தைய பணி உரிமை வழங்கவும் இது வகை செய்கிறது.
அடுத்த 15 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடுகளை 20 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது என இரு நாடுகளும் ஒப்புக்காண்டுள்ளன.
விவசாயிகள் மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பால், காபி, பண்ணை பொருட்கள், கிரீம், வெண்ணெய், மோர், தயிர், வெங்காயம், சர்க்கரை, மிளகாய், சமையல் எண்ணெய், ரப்பர் உள்ளிட்ட பொருட்களுக்கான சந்தை அணுகுமுறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207300®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2207369)
आगंतुक पटल : 17