உள்துறை அமைச்சகம்
கப்பல்கள் மற்றும் துறைமுக அமைப்புகளைப் பாதுகாக்க துறைமுகப் பாதுகாப்பு பிரிவை நிறுவுவதற்கான கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நடத்தினார்
प्रविष्टि तिथि:
19 DEC 2025 12:40PM by PIB Chennai
கப்பல்கள் மற்றும் துறைமுக அமைப்புகளைப் பாதுகாக்க துறைமுகப் பாதுகாப்பு பிரிவு ஒன்றை நிறுவுவதற்கான கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வணிகக் கப்பல் சட்டம் 2025-ன் பிரிவு 13-ன் கீழ், துறைமுகப் பாதுகாப்பு பிரிவு என்ற இந்த சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரிவு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறையின் கண்காணிப்பில் தலைமை இயக்குநர் ஒருவரால் தலைமை தாங்கப்படும். கப்பல்கள் மற்றும் துறைமுக அமைப்புகளின் பாதுகாப்புத் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்புக்கு இந்தப் பிரிவு பொறுப்பாகும். இடைமாற்றக் காலமான ஓராண்டுக்கு கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர், துறைமுகப் பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநராக செயல்படுவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206443®=3&lang=1
***
SS/SMB/KPG/SE
(रिलीज़ आईडी: 2206755)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam