உள்துறை அமைச்சகம்
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, வாழ்த்து
प्रविष्टि तिथि:
19 DEC 2025 11:58AM by PIB Chennai
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். 1961 வரை இந்தியர்கள் கோவாவுக்குச் செல்ல அனுமதி பெற வேண்டியிருந்தது என்பது தற்போதைய தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. பிரபாகர் வைத்யா, பாலா ராயா மபாரி, நானாஜி தேஷ்முக், ஜகநாத் ராவ் ஜோஷி போன்ற பல மாமனிதர்கள் இதற்கு எதிராக நின்று, கோவாவின் விடுதலைக்காகப் போராடினர். நமது தேசபக்தர்கள் செய்த பெரும் தியாகங்களுக்குப் பிறகு, கோவா இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. கோவாவின் சுதந்திரத்திற்காக அளவற்ற வலிகளைத் தாங்கிக்கொண்ட அனைத்து உன்னத ஆத்மாக்களுக்கும் தலைவணங்குகிறேன்,” என்று கூறியுள்ளார்.
********
SS/PKV/EA
(रिलीज़ आईडी: 2206553)
आगंतुक पटल : 13