பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஓமன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 4:57PM by PIB Chennai

1) விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம்

நெருங்கிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.

வர்த்தகத் தடைகளைக் குறைத்துஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல்.

பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குதல்பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை அதிகரித்தல்.

2) கடல்சார் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உட்பட கடல்சார் அருங்காட்சியகங்களுக்கு ஆதரவளிக்க கூட்டாண்மையை நிறுவுதல்.

பகிரப்பட்ட கடல்சார் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும்சுற்றுலாவை அதிகரிப்பதற்கும்இருதரப்பு கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும்கலைப்பொருட்கள் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம்கூட்டுக் கண்காட்சிகள்ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உதவுதல்.

3) விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் போன்ற அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு குடை கட்டமைப்பு ஆவணம்.

விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள்தோட்டக்கலை மேம்பாடுஒருங்கிணைந்த பண்ணை அமைப்புகள் மற்றும் நுண்ணீர்ப்பாசனம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு.

4) உயர்கல்வித் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மனித மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு இலக்குகளை முன்னேற்றுவதற்குத் தேவையான புதிய அறிவு மற்றும் புதுமையான நடைமுறைகளை உருவாக்குவதற்காகபரஸ்பர நலன் சார்ந்த பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சிகுறிப்பாகப் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போதுஆசிரியர்கள்ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களின் பரிமாற்றத்திற்கு உதவுதல்.

5) சிறுதானியப் பயிர் சாகுபடி மற்றும் வேளாண் உணவுப் புத்தாக்கத்தில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம்

சிறுதானிய  உற்பத்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னேற்றுவதற்காக இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவம் மற்றும் ஓமனின் சாதகமான வேளாண்-பருவநிலை சூழல்களில் கட்டமைப்பு ஒத்துழைப்பை நிறுவுதல்.

6) கடல்சார் ஒத்துழைப்பு குறித்த கூட்டு தொலைநோக்கு ஆவணத்தை ஏற்றுக்கொள்ளுதல்

பிராந்திய கடல்சார் பாதுகாப்புநீலப் பொருளாதாரம்கடல் வளங்களின் நிலையான பயன்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

 

***

(Release ID: 2205993)

AD/PKV/SE


(रिलीज़ आईडी: 2206200) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam