ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டிற்கான புதிய உறுதிமொழி, வேலைவாய்ப்பிற்கான புதிய உத்தரவாதம்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 1:14PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், 'வளர்ச்சியடைந்த பாரதம் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) (விக்சித் பாரத் – ஜி ராம் ஜி) மசோதா, 2025'-ஐ இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். திறன் குறைந்த உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும், ஒவ்வொரு நிதியாண்டிலும் நூற்று இருபத்தைந்து நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், ' வளர்ச்சியடைந்த பாரதம் @2047' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க ஒரு கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், எதிர்காலத்திற்குத் தயாரான, ஒருங்கிணைப்பால் உந்தப்படும், முழுமையான செயலாக்கத்தை நோக்கிய ஒரு கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமப்புற மேம்பாட்டின் வேகத்தை விரைவுபடுத்த உதவும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் மூலம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204496®=3&lang=1
***
Release ID: 2204496
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2204776)
आगंतुक पटल : 32