கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்திய அரசுக்கு ரூ.109 கோடிக்கும் அதிகமான ஈவுத்தொகைக்கான காசோலையை பிஎச்இஎல் ஒப்படைத்தது
प्रविष्टि तिथि:
15 DEC 2025 2:10PM by PIB Chennai
பாரத மிகு மின் நிறுவனம் (பிஎச்இஎல்) டிசம்பர் 15 திங்கள் கிழமை தனது ஈவுத்தொகை விநியோக நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கனரக தொழில்கள் அமைச்சக செயலாளர், இணைச் செயலாளர் (கனரக தொழில்கள் அமைச்சகம்), பாரத மிகு மின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல்பாட்டு இயக்குநர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவின் போது, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சரிடம் ரூ.109.98 கோடி ஈவுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. 2024-25 நிதியாண்டிற்கான ஈவுத்தொகை செலுத்துதல் 2023-24 நிதியாண்டிற்கான ஈவுத்தொகை செலுத்துதலை விட 100% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சர், இந்திய அரசின் முக்கிய முயற்சிகள் மூலம் வளர்ச்சியைடந்த இந்தியாவை உருவாக்குவதில் பிஎச்இஎல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204020®=3&lang=1
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2204139)
आगंतुक पटल : 19