ரெயில்வே அமைச்சகம்
மிசோரமுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட கார்கள் - மாநிலத்தின் போக்குவரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்
प्रविष्टि तिथि:
14 DEC 2025 3:36PM by PIB Chennai
மிசோரமின் சாய்ராங் ரயில் நிலையத்துக்கு, குவஹாத்திக்கு அருகிலுள்ள சாங்சாரியிலிருந்து 119 மாருதி கார்கள் ரயில் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது. மிசோரம் மாநிலத்துக்கு ரயில் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வாகனங்களை அதிகரிக்கும். வாகனங்களை கொண்டு செல்ல சாலைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
மேலும் மிசோரமின் வாகன (ஆட்டோமொபைல்) துறைக்கு இது பயனளிக்கும். இதைப் பெறுவதில் டீலர்கள், சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர்கள் அடங்குவர். இது மாநிலத்தின் உள்கட்டமைப்பிலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த சாதனை, போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துதல், பிராந்திய வளர்ச்சியை அதிகரித்தல், நாடு முழுவதும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ரயில்வேயின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
பைராபி-சாய்ராங் ரயில் பாதை மிசோரமுக்கு ஒரு முக்கிய உள்கட்டமைப்பு மைல்கல்லாகும். சவாலான நிலப்பரப்பு வழியாக மிக நுணுக்கமாக அமைக்கப்பட்ட இந்த பாதை 51.38 கிலோ மீட்டருக்கு மேல் நீண்டுள்ளது. இது 45 சுரங்கப்பாதைகள் வழியாக செல்கிறது. நாட்டின் பிற பகுதிகளுடன் இந்த பகுதியை இணைப்பதில் இந்த ரயில் பாதை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 செப்டம்பர் 13 அன்று திறந்து வைத்தார். இதன் மூலம் இந்தியாவின் தேசிய ரயில் கட்டமைப்பில் மிசோரம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது.
மிசோரமில் இயக்கப்படும் புதிய ரயில் சேவைகளுக்கு பயணிகள் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கிறது.
பைராபி-சாய்ராங் பாதையில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளும் தொடங்கியது. சாய்ராங்கிலிருந்து முதல் சரக்கு போக்குவரத்து 2025 செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இந்த பாதை நம்பகமான சரக்கு போக்குவரத்து வழித்தடமாக மாறி வருவதையும், போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதையும், மிசோரமின் பொருளாதார, உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203707®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2203762)
आगंतुक पटल : 46