பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் ஜவுளி துறையில் 11 ஆண்டுகால வரலாற்று மாற்றத்தை எடுத்துக்காட்டும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 DEC 2025 4:30PM by PIB Chennai
இந்தியாவின் ஜவுளி துறை கடந்த பதினொரு ஆண்டுகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார், இந்தக் கட்டுரை மதிப்புச் சங்கிலி முழுவதும் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, நவீனமயமாக்கல் மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை பற்றி எடுத்துரைக்கிறது
மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்-ன் எக்ஸ் தளப் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: “கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் ஜவுளி துறை வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. வலுவான உள்கட்டமைப்புகள், விரிவடைந்த சந்தைகள், மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு, பரந்த உள்ளடக்கம் எனப் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த மதிப்புச் சங்கிலி இப்போது வேலைவாய்ப்பை உருவாக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், உலக அளவில் இந்திய ஜவுளித் துறை போட்டியிடவும் உதவுகிறது
திரு கிரிராஜ் சிங் எழுதிய இந்தக் கட்டுரை, இந்த வளர்ச்சிப் பாதையை ஆழமாக விளக்குகிறது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!”
***
SS/EA/SE
(रिलीज़ आईडी: 2203197)
आगंतुक पटल : 12