பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 12 DEC 2025 10:26AM by PIB Chennai

திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.  பொது சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த அனுபவம் வாய்ந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்துள்ளார்.

திரு சிவராஜ் பாட்டீல் மறைவு குறித்து தமது செய்தியில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.  நீண்ட மற்றும் சிறப்புமிக்க பொது வாழ்க்கையில் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்தவர் திரு பாட்டீல்  என  அவர் கூறியுள்ளார். சமூக நலனுக்கான பொறுப்புணர்வு  மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான உறுதியான அர்ப்பணிப்புக்காக திரு பாட்டீல் அறியப்பட்டார்.

பல ஆண்டுகளாக திரு பாட்டீலுடன் தமது பல தொடர்புகளை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்களின் சமீபத்திய சந்திப்பு சில மாதங்களுக்கு முன்பு திரு பாட்டீல் தமது  இல்லத்திற்கு வந்தபோது நடந்தது என்பதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் திரு மோடி கூறியிருப்பதாவது;

"திரு சிவராஜ் பாட்டீல் அவர்களின் மறைவால் வருத்தமடைந்தேன். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மக்களவையின் சபாநாயகராக நீண்ட காலம் பணியாற்றியவர். சமூக நலனுக்காக பங்களிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக நான் அவருடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன், மிகச் சமீபத்திய சந்திப்பு  சில மாதங்களுக்கு முன்பு, அவர் என் வீட்டிற்கு வந்தபோது நடந்தது. இந்தத் துயரமான  நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. ஓம் சாந்தி.

***

SS/PKV /KR


(रिलीज़ आईडी: 2202842) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam