குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி இடம்பெற்றுள்ளதற்குக் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வரவேற்பு
प्रविष्टि तिथि:
10 DEC 2025 12:54PM by PIB Chennai
தொட்டு உணர முடியாத, உருவமற்ற கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகையைச் சேர்க்க யுனெஸ்கோ எடுத்த முடிவு குறித்து குடியரசுத் துணைக் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த உலகளாவிய அங்கீகாரம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் சிறந்த தருணம் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல என்றும், தேசத்தை ஒன்றிணைத்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரு நாகரிக நிகழ்வு என்றும் கூறியுள்ளார். இந்தத் திருவிழா இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். நம்பிக்கை, நல்லிணக்கம், இருளை வெற்றி கொள்ளும் ஒளி, அதர்மத்தை வெற்றி கொள்ளும் தர்மம் என்ற காலத்தால் அழியாத செய்தியை இப்பண்டிகை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், மனிதகுலத்தின் நல்லிணக்கத்துக்கான செய்தியையும் இந்த கௌரவம் கொண்டாடுவதாகக் கூறியுள்ள திரு சி.பி.ராதாகிருஷ்ணன், இதற்காக, நாட்டு மக்களுக்குத் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
(Release ID: 2201332)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2201969)
आगंतुक पटल : 13