தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகையாளர் நலனுக்கு அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன்

प्रविष्टि तिथि: 10 DEC 2025 4:27PM by PIB Chennai

பத்திரிகையாளர்கள் நலனில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பத்திரிகை தகவல் அலுவலகத்தால் (பிஐபி) அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீடு பெறுகிறார்கள். இதில் அரசு/சிஜிஎச்எஸ் பட்டியலிட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிஜிஎச்எஸ் கட்டணத்தில் சிகிச்சை பெறுவதும் அடங்கும்.

பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு காரணமாக சிரமத்திற்கு ஆளாகும் பத்திரிகையாளர்கள்/ஊடகப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க பத்திரிகையாளர் நலத்திட்டத்தை மத்திய அரசு   செயல்படுத்துகிறது.

நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்பட்ட அல்லது கடுமையான நோய்கள் கண்டறியப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு  விபத்துகளால் கடுமையான காயங்களை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கும்  நிதி உதவி வழங்கப்படுகிறது.

பிஐபி மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுளால் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளர்கள் இந்த திட்டத்தில் உள்ளனர்.

பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ், 2014-15 முதல் 2024-25 வரை 402 பத்திரிகையாளர்கள்/ஊடகப் பணியாளர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்கியுள்ளது.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மக்களவையில் இன்று (10 டிசம்பர் 2025) திரு அரவிந்த் கண்பத் சாவந்த், திரு. சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

(Release ID: 2201528)

****

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2201802) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Odia , Telugu , Kannada