தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியாயமான போட்டித்தன்மையையும் துல்லியமான தொலைக்காட்சி மதிப்பீடுகளையும் உறுதி செய்ய, வரைவு டிஆர்பி வழிகாட்டுதல்களை அரசு திருத்தியுள்ளது - தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

प्रविष्टि तिथि: 10 DEC 2025 3:45PM by PIB Chennai

இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் எனப்படும் டிஆர்பி (TRP) தொடர்பான வழிமுறைகள், 2014-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

02.07.2025 அன்றுபொது ஆலோசனைகளுக்காக இந்த வழிகாட்டுதல்களில் ஒரு வரைவுத் திருத்தத்தை அரசு வெளியிட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள்நியாயமான போட்டியை ஏற்படுத்துதல்மிகவும் துல்லியமான தரவை உருவாக்குதல்நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மாறுபட்ட ஊடக ரசனைகளை பிரதிபலிப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அது தொடர்பான கருத்துகளை ஆராய்ந்த பிறகுபொதுமக்களின் ஆலோசனைக்காக 06.11.2025 அன்று திருத்தப்பட்ட வரைவு வெளியிடப்பட்டது.

இந்தத் தகவலை இன்று (10.12.2025), மக்களவையில் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்  தெரிவித்தார்.

***

(Release ID: 2201483)

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2201783) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Kannada