இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தாய்லாந்தின் ஆஸ்கர் நுழைவுத் திரைப்படம்
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் சர்வதேசப் பிரிவுக்கு, தாய்லாந்தின் ஆஸ்கர் நுழைவுத் திரைப்படம் மற்றும் கேன்ஸ் திரைப்படவிழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற ‘ஏ யூஸ்ஃபுல் கோஸ்ட்’ ஒரு மறக்க முடியாத இறுதிப் படக்காட்சியாக அமைந்தது.
இயக்குநர் ரட்சபூம் பூன்பன்சசோக் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், இறந்த மனைவி ஒரு வேக்வம் கிளீனராக மறுபிறவி எடுக்கும் வினோதமான கதையைச் சொல்கிறது. தாய்லாந்தில் உள்ள தூசி மாசுப் பிரச்சினையை இது சுட்டிக்காட்டுவதாகவும், ஒரு உயிரிழப்புக்கு காரணமான மாசுவுக்கு எதிராக அமைந்த ஒரு கவித்துவமான பதிலாக இது அமைந்துள்ளது என்றும் இயக்குநர் கூறினார்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவை, துக்கம், மற்றும் சமூகக் கருத்துகள் ஆகியவற்றுடன் உண்மையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் வேரூன்றி உள்ளது. அதன் தனித்துவமான அணுகுமுறை காரணமாக இது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195810®=3&lang=1
***
SS/VK/RK
रिलीज़ आईडी:
2200807
| Visitor Counter:
21