உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரமுக் சுவாமி மகாராஜ் பிறந்தநாளில் அவருக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை

எளிமை, சேவை, இரக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார் பிரமுக் சுவாமி மகாராஜ் - திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 07 DEC 2025 3:07PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரமுக் சுவாமி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 "எளிமை, சேவை, இரக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த பிரமுக் சுவாமி மகாராஜின் பிறந்தநாளில், நான் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். சுவாமிஜியின் எண்ணங்களும் அவரது நோக்கமும் மிகவும் விரிவானது. அவருடனான ஒவ்வொரு உரையாடலும் புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் அளித்தது. அவரைச் சந்திக்கவும், அவருடன் உரையாடவும், அவருடன் நேரத்தைச் செலவிடவும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். பிரமுக் சுவாமி மகாராஜ் மனித சமூகத்தை கடவுள் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இணைக்கப் பாடுபட்டார். ஒவ்வொரு தனிநபருக்கும் பகவான் சுவாமி நாராயண்ஜி-ன் போதனைகளைப் பரப்பிய பிரமுக் சுவாமி மகாராஜின் நினைவு மனதை அமைதியாலும், பயபக்தியாலும் நிரப்புகிறது."

***

(Release ID: 2200003)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2200115) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada