தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்மார்ட் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவும் உத்தரவு நீக்கம்

प्रविष्टि तिथि: 03 DEC 2025 3:00PM by PIB Chennai

அனைத்துக் குடிமக்களுக்கும் இணையப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்த உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி பாதுகாப்பானது; இணைய மோசடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், மோசடிச் செயல்களைப் பற்றிப் பொதுமக்களே தகவல் அளித்து மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மட்டுமே பயன்படும். பயனர்கள் விரும்பும்போது இந்தச் செயலியை நீக்கிக்கொள்ளலாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சஞ்சார் சாத்தி செயலியின் நோக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக, அதன் பயன்பாடு அண்மையில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து இதன் மூலம் தகவல் கிடைக்கிறது. மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், மொபைல் உற்பத்தியாளர்கள் இனி இந்தச் செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயமில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198110&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2198502) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Odia , Telugu , Malayalam