உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

प्रविष्टि तिथि: 02 DEC 2025 12:28PM by PIB Chennai

அசாம் தினத்தையொட்டி  அசாம் மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாம் தினத்தையொட்டி நமது அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நாள் அஹோம் சகாப்தத்தின் சிறப்பையும், ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்யும் அசாம் மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை பலப்படுத்துவதையும் நினைவுபடுத்துகிறது என்று கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அசாம் மாநிலத்தில் அமைதி நிலவச் செய்து வளர்ச்சி மற்றும் கல்வியின் மையமாக மாற்றியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நாள் நமது ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தி நமது கலாச்சாரத்துடன் நமது தொடர்பை வலுப்படுத்தட்டும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197434&reg=3&lang=1

***

AD/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2197505) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Telugu