இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மை ஸ்டாம்ப் தபால் தலைகள்: திரைப்பட ஆர்வலர்கள் வரவேற்பு
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா முடிவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டின் விழா சினிமா தலைசிறந்த படைப்புகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை; இது தனிப்பட்ட நினைவுகளைச் சேகரிக்கும் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது.
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்காக இந்திய அஞ்சல் துறை மை ஸ்டாம்ப் சேவையை வழங்கியது. இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட இந்த தனிப்பயனாக்கப்பட்ட தபால் தலை திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்திய திரைப்பட விழாவின் இந்த 'மை ஸ்டாம்ப்' வெறும் தபால் தலை மட்டுமல்ல, அது சினிமா, கலை மற்றும் தனிப்பட்ட நினைவுகளின் அழகிய சங்கமமாகும், இது விழாவில் அதிகம் பேசப்பட்ட மற்றும் அதிகம் தேடப்பட்ட பொருட்களில் ஒன்றாக மாறியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195544
***
SS/VK/RJ
रिलीज़ आईडी:
2196897
| Visitor Counter:
4