இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: 'தி ப்ளூ ட்ரெயில்' படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமான 'தி ப்ளூ ட்ரெயில்' படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குநர் திரு கேப்ரியல் மஸ்காரோ பேசுகையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கதையை எழுதிவிட்டேன். கோவாவிற்கு வந்தபோது, அதன் நிலப்பரப்பு பிரேசிலின் அமேசான் காடுகளைப் போலவே இருப்பதை உணர்ந்தேன். அதுவே அமேசான் பகுதியில் படப்பிடிப்பு நடத்த உத்வேகம் அளித்தது. மேலும், கோவா காவல்துறையினரின் ஆடை அலங்காரமும் என்னைக் மிகவும் கவர்ந்தது," என்று திரைபடம் குறித்து சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துக்கொண்டார்.
அமேசான் பழங்குடி மற்றும் கறுப்பினக் கலாச்சாரங்களின் சங்கமமாகத் தான் விளங்குவதாகவும், தனது கலாச்சாரப் பண்பாட்டை இப்படத்தில் பிரதிபலித்திருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் நடிகை ரோசா மலகூட்டா தெரிவித்தார். வாழ்க்கைப் போராட்டங்களையும், மன உறுதியையும் கொண்டாடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192741®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196542
| Visitor Counter:
17