இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: 'லாலா அண்ட் பாப்பி' திரைப்படக் குழுவினருடரான செய்தியாளர் சந்திப்பு
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மும்பையை மையமாகக் கொண்ட மாறிய பாலினத்தவரின் காதல் கதையான 'லாலா அண்ட் பாப்பி' படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் திரு கைசாத் குஸ்தாத், தயாரிப்பாளர் பாபி பேடி மற்றும் நடிகர்கள் வீர் சிங், சுரஜ் ராஜ்கோவா ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் பயமின்றி வாழவும் காதலிக்கவும் உரிமை உண்டு என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.
இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான படமாக இல்லாமல், உலக மக்கள் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு காதல் கதையாக அமைய வேண்டும் என்று இயக்குநர் கைசாத் குஸ்தாத் தெரிவித்தார். நடிகர்கள் வீர் சிங் மற்றும் சுரஜ் ராஜ்கோவா பேசுகையில், மூன்றாம் பாலின சமூகத்தை நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சூழலில், அவர்களின் உணர்வுகளை திரையில் காண்பிப்பது ஒரு வரலாற்றுத் தருணம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இப்படம் முக்கியத் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே சென்றடையும் என்று குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193593®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196529
| Visitor Counter:
19