56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்துள்ள நிலையில் திரைப்படங்களின் மாயாஜாலம் என்றென்றும் நிலைத்திருக்கும்!
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2025 நவம்பர் 28 அன்று நிறைவடைந்துள்ளது. கோவாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளரங்கில் நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆளுமைகளின் வசீகரிக்கும் கலை நிகழ்ச்சிகளால் வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவின் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கும் வேளையில், திரைப்படம், கலாச்சாரம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றின் இந்த நேசத்துக்குரிய கொண்டாட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பதிப்பின் முடிவைக் குறிக்கும் வகையில் அமைந்தது.
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்த இந்த திரைப்பட விழாவில், கோவா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது திரைப்பட ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உலகளாவிய கலை உணர்வைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.
வளர்ந்து வரும் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள் என இரு சாராரையும் வரவேற்கும் வகையிலான சிறப்புவாய்ந்த தருணங்கள், கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற மற்றும் புதிதாக உருவாகியுள்ள திரைப்படத் துறையைச் சேர்ந்த திறமையாளர்களை ஒன்றாகக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்ட விருதுகள் ஆகியவை திரைப்பட ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை அளித்துள்ளன.
பல்வேறு புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற ராட்சபூம் பூன்பன்சாச்சோக் இயக்கிய எ யூஸ்ஃபுல் கோஸ்ட் என்ற திரைப்படத்தின் திரையிடலுடன் இந்த திரைப்பட விழா நிறைவடைந்தது.
ஆஷ்லீ மேஃபேர் இயக்கிய 'ஸ்கின் ஆஃப் யூத்' சிறந்த திரைப்படத்திற்கான மதிப்புமிக்க 'தங்க மயில்' விருதைப் வென்றது.
சந்தோஷ் தவக்கரின் மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ சிறந்த இயக்குநருக்கான "வெள்ளி மயில்" விருதைப் பெறுகிறார்
உபைமர் ரியோஸ் சிறந்த ஆண் நடிகருக்கான "வெள்ளி மயில்" விருதையும், ஜாரா சோஃபிஜா ஓஸ்தான் சிறந்த பெண் நடிகருக்கான "வெள்ளி மயில்" விருதையும் பெறுகின்றனர்.
ஈரானிய திரைப்பட தயாரிப்பாளர் ஹெசம் ஃபரஹ்மண்ட் மற்றும் எஸ்டோனிய திரைப்பட தயாரிப்பாளர் டோனிஸ் பில் ஆகியோர் சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருதை வென்றனர்.
தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத் துறையில் அவரது 50 ஆண்டுகால சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவா முதலமைச்சகர் டாக்டர் பிரமோத் சாவந்த், திரைப்படங்கள் பொது நனவை வடிவமைப்பதுடன், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கின்றன என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்க்கின்றன என்றும் தெரிவித்தார்.
இந்த இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், வேவ்ஸ் பிலிம் பஜார் 1,050 கோடி ரூபாய்க்கும் கூடுதலான வருவாய் ஈட்டியுள்ளது. பெண்கள் இயக்கிய 50 படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. இது திரைப்படத் துறையில் பெண்களின் எழுச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
56 -வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்துள்ள நிலையில் திரைப்படங்களின் மாயாஜாலம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196146
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196400
| Visitor Counter:
6