பிரதமர் அலுவலகம்
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெறும் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
கீதையின் வார்த்தைகள் தனிநபர்களை வழிநடத்துவது மட்டுமின்றி, நாட்டின் கொள்கைகளின் பாதைகளையும் வடிவமைக்கின்றன: பிரதமர்
प्रविष्टि तिथि:
28 NOV 2025 2:05PM by PIB Chennai
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தின் மூலம் கிடைக்கும் திருப்தி, ஸ்ரீமத் பகவத் கீதையின் மந்திரங்களின் ஆன்மீக அனுபவம், மரியாதைக்குரிய பல துறவிகள் மற்றும் குருக்களின் மத்தியில் இருப்பது ஆகியவை தனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் இன்று (28.11.2025) நடைபெற்ற லட்ச கந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோது இதை தெரிவித்தார்.இவை அனைத்தும் எண்ணற்ற ஆசிகளைப் பெறுவதற்கு ஒப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, கீதையின் பூமியான குருக்ஷேத்திரத்தில் தாம் இருந்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, இன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்ட, ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியாவின் மகிமையால் நிரப்பப்பட்ட இந்த பூமிக்கு வருவது தனக்கு மிகுந்த மனநிறைவு தரும் ஒரு தருணமாகும் என்றார். இந்த தருணத்தில், ஒரு லட்சம் பேர் ஒன்றாக பகவத் கீதையின் மந்திரங்களை ஓதும்போது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால ஆன்மீக பாரம்பரியத்தின் வாழும் தெய்வீகத்தைக் காண முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வதும், அம்மாநிலத்தில் உள்ள பாசமுள்ள மக்களிடையே இருப்பதும் எப்போதும் தனக்கு ஒரு தனித்துவ அனுபவத்தை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். குஜராத் மாநிலத்திற்கும், உடுப்பிக்கும் இடையே உள்ள ஆழமான உறவு பற்றி அவர் எடுத்துரைத்தார். இங்கு நிறுவப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலையை துவாரகையில் மாதா ருக்மிணி வழிபட்டதாகவும், பின்னர் ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார் இந்த சிலையை உடுப்பியில் பிரதிஷ்டை செய்ததாகவும், திரு மோடி குறிப்பிட்டார். கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் ஸ்ரீ துவாரகாவை தரிசித்த தெய்வீக அனுபவம் தனக்குக் கிடைத்ததாக கூறிய அவர், இந்த தரிசனம் தனக்கு மகத்தான ஆன்மீக மகிழ்ச்சியைத் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195788
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2196152)
आगंतुक पटल : 6