சாதனை அளவிலான சர்வதேச பங்கேற்பு, உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் வேவ்ஸ் ஃபிலிம் பஜார் 2025 நிறைவடைந்தது
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (ஐஎஃப்எஃப்ஐ) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வேவ்ஸ் ஃபிலிம் பஜார் 2025, சிறப்பாக நிறைவடைந்தது. திரைப்பட தயாரிப்பு, ஒத்துழைப்பு மற்றும் சந்தை விரிவாக்கத்திற்கான வளர்ந்து வரும் உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
தெற்காசிய திரைப்பட சந்தையில் மிகப்பெரிய சர்வதேச கூட்டங்களில் ஒன்றான இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம், 40+ நாடுகளைச் சேர்ந்த 2,500+ பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ஐஎஃப்எஃப்ஐ, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எஃப்டிசி) மற்றும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்எம்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், விழா பரிமாற்றங்கள், தயாரிப்பாளர் ஆய்வகங்கள் மற்றும் புதிய வேவ்ஸ் பஜார் - ஐஎஃப்எஃப்எம் இணை விநியோக நிதி மூலம் இந்தோ-ஆஸ்திரேலிய திரைப்பட உறவுகளை வலுப்படுத்துவதற்கான மூன்று ஆண்டுகால கூட்டுமுயற்சியாகும். இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிடல்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் படைப்பு திட்டங்களின் கூட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195488
(Release ID: 2195488)
***
AD/BR/SH
Release ID:
2195627
| Visitor Counter:
5