இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: ஓடிடி தேர்வுக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா ஒடிடி தேர்வுக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்வுக் குழுத் தலைவர் பாரத்பாலா மற்றும் உறுப்பினர்கள் சேகர் தாஸ், முஞ்சல் ஷ்ராஃப், ராஜேஸ்வரி சச்தேவ் ஆகியோர் ஓடிடி தளங்களின் தாக்கம் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
வழக்கமான சினிமா இலக்கணத்திலிருந்து கதைகளை ஓடிடி விடுவித்துள்ளது என்று பாரத்பாலா கூறினார். சமூகக் கதைகள் ஓடிடி மூலம் புத்துயிர் பெற்றுள்ளன என்றும், உள்ளூர் கதைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இது உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“கலை என்பது சமூக முரண்பாடுகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும், அதனை ஓடிடி சாத்தியமாக்கியுள்ளது" என்று மூத்த இயக்குநர் சேகர் தாஸ் குறிப்பிட்டார். கதைசொல்லும் கலையை ஓடிடி எளிதாக்கியுள்ளதாகவும், மக்கள் தற்போது கதைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்றும் முஞ்சல் ஷ்ராஃப் தெரிவித்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் முக்கியத் தளமாக ஓடிடி உருவெடுத்துள்ளதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195307
***
SS/SE/SH
Release ID:
2195533
| Visitor Counter:
6