இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கும் 'கோந்தல்' திரைப்படம்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மகாராஷ்டிராவின் பழமையான 'கோந்தல்' கலைவடிவத்தை மையமாகக் கொண்ட மராத்தித் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இறை வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த இரவு நேரச் சடங்கு, இப்படத்தில் கதை சொல்லும் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அழிந்து வரும் இக்கலையை ஆவணப்படுத்தும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளதாக இயக்குநர் சந்தோஷ் தவாகர் தெரிவித்தார். இத்திரைப்படத்தின் நடிகர் திரு கிஷோர் பானுதாஸ் கதம், தனது கிராமத்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, கதைக்களத்திற்கு ஏற்ப இயல்பாக நடிப்பதான் சவால் குறித்து விளக்கினார்.
பட்ஜெட் ஒரு தடையாக இருந்தாலும், தரம் குறையாமல் மராத்தி சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் எனவும் பழமைக்கும் புதுமைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இப்படம் அமைந்துள்ளது எனவும் இப்படத்தின் இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195311
***
SS/SE/SH
रिलीज़ आईडी:
2195529
| Visitor Counter:
4