பிரதமர் அலுவலகம்
ராய்ப்பூரில் நவம்பர் 29, 30 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் 60-வது மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்
Posted On:
27 NOV 2025 12:01PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் 60-வது மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
“வளர்ச்சியடைந்த இந்தியா: பாதுகாப்பு பரிமாணங்கள்” என்ற மையப் பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் மேலாண்மை, மகளிர் பாதுகாப்பு, காவல் துறையில் தடய அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்ற முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படும். சிறப்புமிக்க சேவை செய்தவர்களுக்கான குடியரசுத்தலைவரின் காவல்துறை பதக்கங்களையும் இந்த மாநாட்டில் பிரதமர் வழங்குவார்.
2014-ம் ஆண்டுக்குப் பின் பிரதமரின் வழிகாட்டுதல்படி இந்த மாநாடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் மாநாடு ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணையமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195200
***
SS/SMB/KPG/SH
(Release ID: 2195521)
Visitor Counter : 5
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam