இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: திரைப்படத்துறையில் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு அழைப்பு
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025-ல் நவம்பர் 23 அன்று நடைபெற்ற குழு விவாதத்தில் திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ரஜ்னி பசுமதாரி, ஒளிப்பதிவாளர் ஃபௌசியா ஃபாத்திமா, திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ராச்செல் கிரிஃபித்ஸ் திரைப்பட நடிகை மீனாட்சி ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்களின் படைப்பாக்கமும், தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும், திரைப்படத்துறையின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை இவர்களின் உரையாடல் வெளிப்படுத்தியது.
2017-ல் இந்திய பெண் ஒளிப்பதிவாளர்கள் கூட்டமைப்பு தொடங்கியபோது ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகவும் இப்போது இதில் 200-க்கும் அதிகமான ஒளிப்பதிவாளர்கள் இருப்பதாகவும் ஃபௌசியா ஃபாத்திமா தெரிவித்தார். இந்தக் கூட்டமைப்பு பெண் ஒளிப்பதிவாளர்களுக்கு வழிகாட்டியாகவும், ஒருங்கிணைப்பு செய்வதாகவும் இருந்தது என்பதோடு திரைப்படத் தொழில்துறையின் பெண்களுக்கு இத்தகைய ஆதரவான சூழல் தேவை என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
பெண்களால் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு கேரள அரசு நிதியுதவி செய்வது பற்றி எடுத்துரைத்த அதே சமயத்தில், பெண்களின் பெயர்களை ஆண்களும் விண்ணப்பங்களை அளிப்பதாகவும் இதில் தொடர்ச்சியான கண்காணிப்புத் தேவைப்படுகிறது என்றும் திரைப்பட நடிகை மீனாட்சி ஜெயன் கூறினார்.
பெண் ஒருவர் தாய்மை அடைந்தபின் திரைப்படத்துறைக்கு திரும்புவது சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்ட ஃபௌசியா ஃபாத்திமா, தம்மைப் பொருத்தவரை மீண்டும் இத்துறைக்கு வந்திருப்பதாகவும் விஜய் சேதுபதி நடிக்கும் வணிக ரீதியான ட்ரெயின் திரைப்படம் வரவிருப்பதாகவும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193245
***
AD/SMB/KPG/SE
Release ID:
2195496
| Visitor Counter:
6
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Konkani
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada