'தஸ்தான்-இ-குரு தத்’ புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரின் பயணத்தை உயிர்ப்பிக்கிறது
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025-ன் 5-வது நாளில், கோவாவின் கலா அகாடமியில் ‘தஸ்தான்-இ-குரு தத்’என்ற சிறப்பு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. ஃபௌசியா மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் குரு தத்தின் வாழ்க்கை மற்றும் படைப்பு மரபு குறித்த ஒரு ஆழமான விளக்கத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியது.
பிரபல திரைப்பட இயக்குநர் ராகுல் ரவைல், இந்திய சினிமாவுக்கு குரு தத்தின் பங்களிப்பு குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பாடகி லத்திகா ஜெயின், தபேலா கலைஞர் சுதீப், ஹார்மோனியக் கலைஞர் ரிஷப் மற்றும் கிதார் கலைஞர் அங்கித் ஆகியோருடன் ஃபௌசியா பார்வையாளர்களை ஒரு வசீகரிக்கும் கதை மூலம் வழிநடத்தினார்.
கொல்கத்தாவில் குரு தத்தின் ஆரம்பகால குழந்தைப் பருவத்துடன் ஃபௌசியா கதையைத் தொடங்கினார். அவர் தாய்வழி குடும்பத்திலிருந்து பெற்ற படைப்பு தாக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல், அல்மோராவில் உள்ள உதய் சங்கர் கலாச்சார மையத்தில் சேர்ந்து வளர்ச்சி அடைந்தது ஆகியவை விளக்கப்பட்டது.
புனேவில் உள்ள பிரபாத் ஸ்டுடியோவில் ஆரம்ப நாட்களில் தொடங்கிய குரு தத்தின் தேவ் ஆனந்துடனான குறிப்பிடத்தக்க நட்பையும் இது எடுத்துக்காட்டியது. இரண்டு கலைஞர்களும் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்கி, இறுதியில் தயாரிப்பில் ஈடுபடும்போது இணைந்து செயல்படுவதாக உறுதியளித்தனர். இந்த பரஸ்பர வாக்குறுதி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான படைப்பு கூட்டாண்மைகளில் ஒன்றின் தொடக்கத்தைக் குறித்தது.
தேவ் ஆனந்த் நவ்கேதன் திரைப்பட நிறுவனத்தை நிறுவினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தேவ் ஆனந்த் குரு தத்தை நிறுவனத்தின் முதல் படமான "பாஸி"-ஐ இயக்க மும்பைக்கு அழைத்தார், இது குரு தத்தின் புகழ்பெற்ற வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறித்தது. இந்தப் படத்தின் போதுதான் குரு தத் நடிகர் பத்ருதீன் ஜமாலுதீன் காஜிக்கு தனது பிரபலமான திரைப் பெயரான ஜானி வாக்கர் என்ற பெயரைச் சூட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193703
***
SS/PKV/KPG/SE
रिलीज़ आईडी:
2195487
| Visitor Counter:
16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Konkani
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Marathi
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Kannada
,
Malayalam