இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுகள், மீள்தன்மை மற்றும் உயிர் பிழைத்தல் குறித்த கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கொலம்பியா மற்றும் மொசாம்பிக்கின் திரைப்படங்கள் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பார்வையாளர்கள் கண்டனர்.
'Forensics' மற்றும் 'Ku Handza' திரைப்படங்களின் படைப்பாளிகள் நினைவுகள், மீள்தன்மை மற்றும் கலையைப் பற்றிய கதை சொல்லல் அனுபவத்தை வழங்கினர்.
ஃபெடரிகோ அட்டெஹோர்டுவா ஆர்டியாகாவின் 'Forensics' திரைப்படம், இறந்த ஒரு திருநங்கையின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பெண் இயக்குநர், காணாமல் போன உறவினருடன் போராடும் ஃபெடரிகோவின் குடும்பம் மற்றும் தடயவியல் நிபுணரின் சாட்சியம் ஆகிய மூன்று கதைகளை இணைக்கும் ஒரு பரிசோதனைத் திரைப்படமாகும். இது கொலம்பியாவின் கடந்த காலத்தையும், காணாமல் போனவர்கள் விட்டுச் சென்ற வடுக்களையும் ஆராய்கிறது.
"காணாமல் போன உறவினர் இல்லாதவர் கொலம்பியாவில் யாருமில்லை," என்று ஃபெடரிகோ உணர்வுபூர்வமாகக் கூறினார். "இந்தப் படம் மக்களை ஆழமாகச் சென்றடைவதைப் பார்ப்பது பணிவான அனுபவம். நினைவகம் மிகவும் அத்தியாவசியமானது; அது மோதலின் மனித விலையைப் பற்றி இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது காணாமல் போனவர்களைத் தேடுபவர்களுக்கு ஒற்றுமை உணர்வைத் தரும் ஒரு களம்."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194944
***
AD/VK/KPG/KR
Release ID:
2195287
| Visitor Counter:
3