56-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சனத்தின் வளர்ந்து வரும் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, திரைப்பட விமர்சனத்தின் முக்கியப் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், “விரலைக் கடந்து – ஒரு திரைப்பட விமர்சகரின் பங்கு: ஒரு வாயில்காப்பாளரா, ஒரு செல்வாக்கு செலுத்துபவரா அல்லது வேறு ஏதேனுமா?” என்ற வட்டமேசை விவாதத்தை நடத்தியது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் திரைப்பட விமர்சனத்தின் சூழலை இந்த விவாதம் ஆராய்ந்தது. டேவிட் அபத்தேஷியானி நெறிப்படுத்திய இந்த அமர்வில் பார்பரா லோரே டி லச்சேரியர், தீபா கஹ்லோட் மற்றும் பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்ட விமர்சகர்கள் பங்கேற்றனர்.
டேவிட் அபத்தேஷியானி உரையாற்றுகையில், பிரதான சினிமா விமர்சகர்களை பெரிதும் சார்ந்திராவிட்டாலும், சுதந்திரமான திரைப்பட தயாரிப்பாளர்கள் நம்பகமான விமர்சனங்களை ஆழமாக நம்பியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். ஏஐ உள்ளடக்கத்தின் அச்சுறுத்தலைக் குறிப்பிட்டு, விமர்சன விவாதங்கள் பிளவுபடுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
பார்பரா லோரே டி லச்சேரியர், ஒரு விமர்சகரின் முக்கியப் பணி பார்வையாளர்களுக்கு பிரதானமற்ற திரைப்படங்களைக் கண்டறிய உதவும் மத்தியஸ்தராக இருப்பது என்றார். அச்சுப் பதிப்புகளின் இடம் சுருங்குவது மற்றும் வாழ்வாதாரத்திற்காக விமர்சகர்கள் தனிப்பட்ட "பிராண்டை" உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தீபா கஹ்லோட், இன்றைய ஆன்லைன் விமர்சனம் ரசிகர் தன்மை மற்றும் ஆழமின்மையால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்தார். மேலும், ஒடிடி நுகர்வு அதிகரிப்பால் சினிமாவின் நுட்பத்தைப் பாராட்டுவது நீர்த்துப் போகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194788
(செய்தி வெளியீட்டு எண் 2194788)
***
AD/VK/SH
Release ID:
2195002
| Visitor Counter:
3