இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025 : அஸ்ஸாம் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளுக்குத் திரை அஞ்சலி
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 'பைமோன் டா' மற்றும் 'பத்ரலேகா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அஸ்ஸாம் சினிமாவின் ஜாம்பவான்களான முனின் பருவா மற்றும் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படங்கள் அமைந்துள்ளன.
இயக்குனர் சசாங்கா சமீர் இயக்கியுள்ள 'பைமோன் டா' திரைப்படம், பிரபல அஸ்ஸாம் திரைப்பட இயக்குனர் முனின் பருவாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கிறது. இது தனிப்பட்ட ஒருவரின் கதை மட்டுமல்லாமல், கடந்த 90 ஆண்டுகால அஸ்ஸாம் சினிமாவின் வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகால தீவிர ஆராய்ச்சி மற்றும் 360 கலைஞர்களின் பங்களிப்போடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.
மேலும், டாக்டர் பூபன் ஹசாரிகாவின் பாடலைத் தழுவி இயக்குனர் நம்ரதா தத்தா இயக்கியுள்ள 'பத்ரலேகா' குறும்படம், சொல்லப்படாத அன்பு மற்றும் ஏக்கத்தை மையமாகக் கொண்டது. கிராமத்துச் சூழலையும், நகரத்துத் தனிமையையும் காட்சி மொழியாக இப்படம் மாற்றியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவானாலும், திரைக்கலையின் மீதான ஈடுபாடே இப்படத்தை சாத்தியமாக்கியது என்று ஒளிப்பதிவாளர் உத்பல் தத்தா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194679
***
SS/SE/SH
Release ID:
2194951
| Visitor Counter:
4