இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: அரசியல் நெருக்கடியில் சாமானியர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஈரான் மற்றும் ஈராக் திரைப்படங்கள்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஈரான் மற்றும் ஈராக் நாட்டுத் திரைப்படங்கள் குறித்துப் படக்குழுவினர் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஈரானின் 'மை டாட்டர்ஸ் ஹேர்' படத்தின் இயக்குனர் சையத் ஹெசம் ஃபராஹ்மந்த் ஜூ மற்றும் தயாரிப்பாளர் சயீத் கானினமாகி ஆகியோர், சர்வதேசத் தடைகளால் ஈரானிய நடுத்தர வர்க்கம் சந்திக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து இப்படம் வெளிபடுத்துவதாகவும், மடிக்கணினிக்காகத் தலைமுடியை விற்கும் பெண்ணின் கதையின் மூலம் சமூக எதார்த்தத்தை இத்திரைப்படம் விளக்குகிறது என கூறினர்.
மேலும், ஐசிஎஃப்டி யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்குப் போட்டியிடும் ஈராக் படமான 'தி பிரசிடெண்ட்ஸ் கேக்' குறித்துப் பேசிய எடிட்டர் அலெக்ஸாண்டறு ராடு, சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஈராக் மக்கள் அனுபவித்தத் துயரங்களை இப்படம் விவரிப்பதாகத் தெரிவித்தார். வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், இரு படங்களும் அரசியல் அழுத்தங்களுக்கு இடையே மக்களின் மன உறுதியை வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194658
***
SS/SE/SH
Release ID:
2194947
| Visitor Counter:
3