காட்சிகள் வழியாக ஒரு பயணம்: ஒளிப்பதிவு கலைஞர் ரவி வர்மனின் காட்சி உலகம்
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா 2025-ல், 'லென்ஸ் வழியாக: ஒவ்வொரு காட்சியிலும் உணர்வை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஒளிப்பதிவுக் கலைஞர் ரவி வர்மன் கலந்து கொண்ட அமர்வு நடந்தது. இதில், அவரது உள்ளுணர்வு, நினைவுகள் மற்றும் கலை உத்திகள் நிறைந்த காட்சி உலகம் குறித்து அவர் பேசினார்.
தன்னுடைய நீண்ட பெயரைக் குறைத்து 'வர்மன்' என்ற பெயரைக் கொண்டதற்கும், அவர் தன்னை ஒரு போராளியாகவே உணர்வதற்கும் உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்தினார். "ஒரு பிரேம் ரவி வர்மா ஓவியம் போல் இருப்பதாக ஒரு குழந்தை கூறியது, அதுவே இன்றும் என்னுடன் இருக்கிறது" என்றும் அவர் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். விமர்சனங்கள் தம்மை ஒருபோதும் காயப்படுத்தவில்லை, மாறாக சிறந்த படைப்புகளை உருவாக்கவே தூண்டின என்றார்.
ஏழாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, உறுதியற்ற நிலையில் சென்னைக்கு வந்ததே தனது தொடக்கம் என்று அவர் பகிர்ந்தார். வாழ்க்கையை நடத்துவதற்காகவே ரூ.130 கொடுத்து தனது முதல் கேமராவை வாங்கினார். நாளடைவில் ஒளிப்பதிவு மீதான கனவு வளர்ந்து, 2022-ல் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சினிமாட்டோகிராஃபர்ஸ் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம் அது நிறைவேறியது.
ரயில் நிலையங்களுக்கு அருகில் உறங்கிய நாட்களும், பள்ளிக்கு நடந்த நீண்ட பயணங்களும், விடியற்காலையில் ரயில்களின் ஒளியும் அவரது காட்சி உணர்வுக்கு விதை போட்டன. டால்ஸ்டாயின் 'போர் மற்றும் அமைதி' நாவல் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் போர் காட்சிக்கு உத்வேகம் அளித்தது.
'லைட்டிங்' குறித்துப் பேசிய அவர், “மோசமான ஒளி என்று எதுவும் இல்லை, மனம்தான் தீர்மானிக்கிறது,” என்றார். நிழல் என்பது வெறுமை அல்ல, அது மனநிலையை உருவாக்குகிறது என்று கூறி, தனது பாதி பிரேம்கள் நிழலில் ஓய்வெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பத் தேர்வுகள் உள்ளுணர்வின் அடிப்படையில் வருவதாகவும், அழுத்தம் தன் பிரேம்களைத் திருத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194269
(செய்தி வெளியீட்டு எண் 2194269)
***
AD/VK/SH
रिलीज़ आईडी:
2194396
| Visitor Counter:
7