திரைப்படவிழாவில் 'புதிய ஏஐ சினிமா': திரைப்பட உருவாக்கத்தின் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து விவாதம்
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஆறாவது நாளில், “புதிய செயற்கை நுண்ணறிவு திரைப்படம்” குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றது.
பிரபல இயக்குநர் சேகர் கபூர், தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கர் ராமகிருஷ்ணன் மற்றும் வி. முரளிதரன் ஆகியோர் இதில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் திரைப்பட உருவாக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.
செயற்கை நுண்ணறிவு "திரைப்பட உருவாக்கத்திற்கான மிகவும் ஜனநாயகமான ஊடகம்" என்று சேகர்கபூர் குறிப்பிட்டார். இது பாரம்பரியத் தடைகளை உடைத்து, சாதாரண தனிநபர்களுக்கும் படைப்புச் சுதந்திரத்தை அளிக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, தனது சமையல்காரர் ChatGPT மூலம் 'மிஸ்டர் இந்தியா 2' திரைக்கதையை எழுதியதைச் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவானது உலக திரைப்படத்தை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது என்றும், இந்தியாவின் இளைஞர் சக்தி இதில் தலைமை வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், VFX (காட்சிகளைக் கையாளுகிறது) மற்றும் AI (இயந்திர கற்றல் மூலம் உருவாக்குகிறது) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அவர் விளக்கினார். தொழில்நுட்ப வல்லுநர்கள், ChatGPT மற்றும் கூகுள் ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் திரைக்கதை, ஸ்டோரிபோர்டிங் ஆகியவற்றில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எடுத்துரைத்து, ஏஐ உதவியுடன் தாங்கள் உருவாக்கிய “தி டர்பன் அண்ட் தி ராக்” திரைப்படத்தையும் திரையிட்டனர். ஏஐ ஆவணப்படம், ஆவணக் காப்பகப் புனரமைப்பு மற்றும் திரைப்படக் கல்விக்கு உதவுவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194216
(செய்தி வெளியீட்டு எண் 2194216)
***
AD/VK/SH
Release ID:
2194375
| Visitor Counter:
4