தாய்மை, அடையாளம், வரலாற்றைப் பேசும் உலக சினிமா: இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் கவனம் ஈர்த்த 'மதர்ஸ் பேபி', 'மை ஃபாதர்ஸ் ஷேடோ'
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று, தாய்மை, அடையாளம், மற்றும் வரலாறு போன்ற ஆழமான கருப்பொருள்களைத் தொடும் இரண்டு சிறப்பான திரைப்படங்களான 'மதர்ஸ் பேபி' மற்றும் 'மை ஃபாதர்ஸ் ஷேடோ' ஆகியவற்றின் குழுவினர், சினிமா மற்றும் வாழ்வின் யதார்த்தங்கள் குறித்து உரையாடினர்.
இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரையாக உலகளவில் புகழ் பெற்றதும், கேன்ஸ் திரைப்பட விழாவின்திரையிடப்பட்ட முதல் நைஜீரியப் படமுமான 'மை ஃபாதர்ஸ் ஷேடோ' திரைப்படத்தின் இயக்குநர் அகினோலா ஒகுன்மேட் டேவிஸ், மற்றும் 'மதர்ஸ் பேபி' குழுவினர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.
அகினோலாவின் உள்ளுணர்வுமிக்க திரைப்படம்
தமது படைப்புச் செயல்பாட்டின் பெரும்பகுதி உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்டதாக இயக்குநர் அகினோலா விளக்கினார். 1993 ஆம் ஆண்டு நைஜீரியத் தேர்தல்களின் பின்னணியில் அமைந்த இந்தப் படம், ஒரு தந்தையும் மகன்களும் பற்றிய நுண்ணிய கதையையும், தேர்தல் மற்றும் அரசியல் பதற்றத்தின் பெரிய கதையையும் இணைக்கிறது.
அவர், ஒரே நாளில் நடக்கும் கதையை அமைத்ததால், உணர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது என்றும், இது கதைக்குச் சுதந்திரம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், படப்பிடிப்பின்போது கடற்கரைக் காட்சிகளில் 16மி.மீ ஃபிலிம் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் ஒரு இறுதிச் சடங்குக் காட்சியில் தாம் அடைந்த மனச்சோர்வு பற்றியும் வெளிப்படையாகப் பேசினார். அத்தகைய உணர்ச்சிப்பூர்வத் தருணங்களை "சக்திவாய்ந்த திரைப்பட உருவாக்கத்திற்கான சான்றுகள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அகினோலா , நைஜீரியாவின் அரசியல், மொழியியல் பன்முகத்தன்மை குறித்தும் பேசினார். ஆங்கிலம், கிரியோல், மற்றும் தெரு வழக்கு மொழிகள் அவரது படத்தில் இடம் பெற்றிருப்பது, நைஜீரிய சமூகத்தின் கலாச்சாரக் கலவையைப் பிரதிபலிப்பதாகவும், சமகால சினிமா வரலாற்றில் இன்னும் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நைஜீரியாவைப் பற்றிய தெளிவான சித்திரத்தை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194171
(செய்தி வெளியீட்டு எண் 2194171)
***
AD/VK/SH
Release ID:
2194371
| Visitor Counter:
5