உள்துறை அமைச்சகம்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்ததற்காக என்சிபி, தில்லி காவல்துறை ஆகியவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு
Posted On:
23 NOV 2025 5:34PM by PIB Chennai
சர்வதேச அளவில் போதைப் பொருள் (மெத்தாம்பேட்டமைன்) கடத்தும் கும்பலை, ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரஸ் என்ற நடவடிக்கையின் கீழ் பிடித்ததற்காக போதைப்பொருள் தடுப்பு அமைப்பான என்சிபி (NCB), தில்லி காவல்துறை ஆகியவை அடங்கிய கூட்டுக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எங்களது அரசு போதைப்பொருள் கும்பல்களின் கட்டமைப்பை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உடைத்து வருகிறது. போதைப்பொருள் விசாரணையில் சிறந்த அணுகுமுறையை தீவிரமாகப் பின்பற்றி, புதுதில்லியில் ₹262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்துள்ளது ஒரு திருப்புமுனை நடவடிக்கை. போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எட்ட பல அமைப்புகளின் தடையற்ற ஒருங்கிணைப்புக்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தல்லி காவல்துறை ஆகியவற்றின் கூட்டுக் குழுவிற்கு வாழ்த்துகள்" என்று திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு அமைப்பும், தில்லி காவல்துறையும், 20.11.2025 அன்று தில்லியின் சத்தர்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுமார் 328 கிலோகிராம் மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்து, ஒரு சர்வதேச கடத்தல் கும்பலின் முயற்சியை முறியடித்தன.
இந்த உறுதியான நடவடிக்கை, கடந்த சில மாதங்களாக உளவுத்துறை மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் வெற்றியாகும்.
***
(Release ID: 2193199)
AD/PLM/RJ
(Release ID: 2193270)
Visitor Counter : 9