சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவில் பிறந்த சிவிங்கிப் புலியான முகி, 5 குட்டிகளை ஈன்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
प्रविष्टि तिथि:
20 NOV 2025 4:22PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் பிறந்த 33 மாத வயதுடைய பெண் சிவிங்கிப் புலியான முகி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இது இந்தியாவில் சிவிங்கிப் புலி இனத்தை மீண்டும் பெருகச் செய்யும் முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்த சிவிங்கிப் புலி வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வது வரலாற்றில் இதுவே முதல் நிகழ்வு என்றும் திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய தன்மையுடன் கூடிய வாழ்விடங்களில் இந்த வகை உயிரினங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகள், சிவிங்கிப் புலிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என திரு பூபேந்தர் யாதவ் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192109
(Release ID: 2192109)
***
SS/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2192342)
आगंतुक पटल : 35