ஊடகங்களுக்கான திரைப்படத் திறனாய்வு பாட நெறிகளை மகாராஷ்டிரா மற்றம் கோவாவில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகம் நடத்தியது
மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகங்களுக்கான அங்கீகாரம் வழங்கும் வகையில் திரைப்படத் திறனாய்வுப் பாடநெறிக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. கோவாவில் நடைபெறவுள்ள 56-வது சர்வதேச திரைப்படவிழாவிற்கு முன்னதாக இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த திரைப்படத் திருவிழாவை ஊடகவியலாளர்கள் திரைப்படங்களை ஆழமாக புரிந்து கொண்டு தகவல்களை முழுமையாக வெளியிடும் வகையில், இந்த சிறப்பு நிகழ்ச்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பாடநெறிமுறையை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் குழு உறுப்பினரும், திரைப்பட ஆய்வாளருமான பேராசிரியர் டாக்டர் இந்திரனில் பட்டாச்சார்யா மற்றும் திரைப்பட இயக்கம் குறித்த இணை பேராசிரியர் வைபவ் அபினவ் ஆகியோர் நடத்தினர்.
இதில் வகுப்பறை பாடங்கள், திரைப்படக்காட்சிகள், விவாதங்கள், பகுப்பாய்வு பயிற்சிகள், துறைசார்ந்த நிபுணர்களின் கலந்துரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191679
***
AD/SV/KPG/SH
Release ID:
2191841
| Visitor Counter:
3