பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 17 NOV 2025 12:27PM by PIB Chennai

சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அளித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தேவையான உதவியையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்கு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“மதினா விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது பெரும் கவலை அளிக்கிறது, எனது எண்ணங்கள் தங்களது அன்பானவர்களை இழந்த குடும்பத்தினருடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

ரியாத்தில் உள்ள நமது தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. நமது அதிகாரிகளும் சவுதி அரேபிய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்”.

(Ref ID: 2190706)

***

SS/IR/LDN/RK


(Release ID: 2190788) Visitor Counter : 8