உள்துறை அமைச்சகம்
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2025 3:42PM by PIB Chennai
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தமது பதிவில், பகவான் பிர்சா முண்டா பழங்குடி சமூகத்திற்கு மட்டும்மின்றி, முழு நாட்டிற்கும் பெருமை சேர்ப்பவர் என்று கூறியுள்ளார். இன்று, முழு தேசமும் அவரது 150-வது பிறந்தநாளையும், பழங்குடியினர் கௌரவ தினத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது என்று அவர் கூறியுள்ளார். சுதந்திர இயக்கம் மற்றும் நமது தாய்நாட்டின் பாதுகாப்புக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நாம் அவருக்கு மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம் என்றும் திரு ஷா கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், பழங்குடி அடையாளத்தின் சின்னமான, இந்தியாவின் பெருமைமிக்க ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான தர்த்தி அபா பகவான் பிர்சா முண்டாவுக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதாக திரு அமித் ஷா கூறியுள்ளார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடுவதன் மூலம் பிரதமர் மோடி அவரை கௌரவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒருபுறம், தர்த்தி அபா பழங்குடி சமூகத்தினரை அவர்களின் கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க ஊக்கப்படுத்தினார், மறுபுறம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர்களை ஒன்றிணைத்து கிளர்ச்சி இயக்கத்தை ஊக்குவித்தார் என்று திரு ஷா கூறியுள்ளார். பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை ஒவ்வொரு தேசபக்தருக்கும் உத்வேகத்தின் வற்றாத ஆதாரமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
***
SS/PVK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2190380)
வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada