வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா-கனடா கூட்டு அறிக்கை
Posted On:
14 NOV 2025 9:22AM by PIB Chennai
2025 நவம்பர் 11-14 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்ட கனடாவின் ஏற்றுமதி ஊக்குவிப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் திரு மணீந்தர் சித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலுடன், வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
கனடாவின் கனனாஸ்கிஸில் நடந்த ஜி7 கூட்டத்தின் போது, இரு நாட்டு பிரதமர்களும் வழங்கிய வழிகாட்டுதலின்படியும், இருதரப்பு பொருளாதார வளர்ச்சிக்கான வர்த்தகக் கூட்டாண்மையை நோக்கியும் இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது.
பேச்சுக்களின் போது, இந்தியா-கனடா பொருளாதார கூட்டாண்மையின் வலுவான தொடர்ச்சியை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் நிலையான உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் எதிர்கால முயற்சிகள் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இருதரப்பு வர்த்தகத்தில் வலுவான வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 23.66 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது முந்தைய ஆண்டை விட கணிசமான 10% அதிகரிப்பு என்று அமைச்சர்கள் குறிப்பிட்டனர். இந்தியா-கனடா பொருளாதாரக் கூட்டாண்மையின் வலிமையை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்க தனியார் துறையுடன் தொடர்ந்து ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இந்தியாவில் குறிப்பிடத்தக்க கனடா நிறுவனங்களின் முதலீடு மற்றும் கனடாவில் இந்திய நிறுவனங்களின் வளர்ந்து வரும் போக்கு உள்ளிட்ட இருவழி முதலீட்டு விரிவாக்கத்தை அவர்கள் வரவேற்றனர். இவை இரு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான வேலைகளை வழங்குகின்றன. வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டு சூழலைப் பராமரிப்பதற்கும், முன்னுரிமை மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் வலுவான ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்கும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
நிலையான வளர்ச்சி மற்றும் புதுமைகளை இயக்கும் உத்திசார் துறைகளில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே புதிய வாய்ப்புகள் உள்ளதையும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர். இந்தத் துறைகளில் இரு தரப்பிலும் உள்ள தொடர்புடைய பங்குதாரர்களிடையே தனித்தனி கள அளவிலான ஈடுபாடு தேவைப்படும் என்பதை அமைச்சர்கள் உணர்ந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189888
***
SS/PKV/AG/KR
(Release ID: 2189987)
Visitor Counter : 5