ஐஎஃப்எஃப்ஐ 2025-ல் அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவிக்கும் திரைப்படங்களின் சிறப்பை கௌரவிப்பதற்காக ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம்
46-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) நிறுவப்பட்ட ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம், யுனெஸ்கோவின் கீழ் ஐசிஎஃப்டி பாரிஸுடன் இணைந்து வழங்கப்படும் ஒரு சர்வதேச கௌரவமாகும். அமைதி மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிக்கும் மற்றும் மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் அமைதி பற்றிய தொலைநோக்குப் பார்வையை கௌரவிக்கும் ஒரு சிறந்த திரைப்படத்திற்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
அல்ஜியர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்-தயாரிப்பாளர் மற்றும் கலை இயக்குநர் (ஜூரி தலைவர்) டாக்டர் அகமது பெட்ஜௌய்; சர்வதேச திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஆடியோவிஷுவல் கம்யூனிகேஷன் கவுன்சிலின் துணைத் தலைவரும் படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கான தளத்தின் இயக்குநருமான சூயன் ஹுன்; யூனியன் இன்டர்நேஷனல் டு சினிமாவின் துணைத் தலைவர் செர்ஜ் மிஷில்; சர்வதேச நாடக நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் டோபியாஸ் பியான்கோன் மற்றும் சர்வதேச திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஆடியோவிஷுவல் கம்யூனிகேஷன் கவுன்சிலின் தலைமை இயக்குநர் ஜார்ஜஸ் டுபோன்ட் ஆகியோர் அடங்கிய ஜூரி குழு இந்த வருடத்தின் குறிப்பிடத்தக்க 10 திரைப்படங்களை மதிப்பீடு செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2188110
***
SS/BR/ RK
Release ID:
2189273
| Visitor Counter:
8
Read this release in:
Assamese
,
English
,
Gujarati
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada