மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 01 OCT 2025 3:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை  நாடு தழுவிய அளவில் கொண்டாடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தப் பாடல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக இந்த பாடல் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

***

(Release ID : 2185649)

SS/SV/LDN/RK/KR


(रिलीज़ आईडी: 2188676) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam