பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான அந்தே ஸ்ரீ-ன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
10 NOV 2025 3:02PM by PIB Chennai
புகழ்பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான அந்தே ஸ்ரீ- ன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது கலாச்சாரம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் தவிர்க்க முடியாத சிந்தனைகளை அந்தே ஸ்ரீ விதைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது சிந்தனைகள் தெலங்கானா மாநிலத்தின் ஆன்மாவாக பிரதிபலிக்கிறது. புகழ்பெற்ற கவிஞராகவும் சிந்தனையாளராகவும் இருந்த அவர், மக்களின் நலனுக்காக அவர் ஆற்றி சேவைகள் என்றென்றும் நினைவில் நிற்கும்.
அவரது பாடல் வரிகள் மக்களின் மனதை கவரும் வகையிலும், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், சமூகத்தின் ஒருங்கிணைந்த நாடித்துடிப்பை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளதாக தெரிவித்தார். சமூக முன்னேற்றத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்து அவர் இயக்கிய பாடல்கள் மிகச் சிறப்பானவை என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது;
“நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார்ந்த அம்சங்களில், மறைந்த அந்தே ஸ்ரீ நீங்காத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். அவரது சிந்தனைகள் தெலங்கானா மாநிலத்தின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக உள்ளது. புகழ்பெற்ற கவிஞராகவும் சிந்தனையாளராகவும் இருந்த அவர், மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் நினைவில் நிற்கும்.
அவரது பாடல் வரிகள் மிகவும் வலிமையானதாகவும், இதயங்களை ஈர்க்கும் வகையிலும், ஒருமைப்பாடு மற்றும் சமூகத்தின் நாடித்துடிப்பை ஒருங்கிணைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. சமூக சீர்திருத்தத்திற்கான அவரது கருத்துக்களுடன் கூடிய அழகான பாடல்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எனது எண்ணங்கள் இருக்கின்றன.”
ஓம் சாந்தி…..
(Release ID:2188311)
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2188470)
आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam