உள்துறை அமைச்சகம்
பீகாரின் பாட்னாவில் வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
07 NOV 2025 3:17PM by PIB Chennai
பீகாரின் பாட்னாவில் வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். சுதேசி உறுதிமொழி ஏற்கும் விதமாக அனைவரும் ஒருங்கிணைந்து வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சிக்கும் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, இந்தியர்களின் மனச்சான்றை விழிப்படையச் செய்வதாக இந்த நாள் உள்ளது. ஏனெனில் 150 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் வந்தே மாதரம் பாடலை எழுதினார்.
வந்தே மாதரம் என்ற மந்திரத்துடனும் உணர்வுடனும் நமது வாழ்க்கையை பிணைப்பதற்கான தேசம் தழுவிய இயக்கம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த இயக்கம் நேரடியாகவும், டிஜிட்டல் வடிவிலும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தேச ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்து மாநில மொழிகளிலும் வந்தே மாதரம் பாடல் எழுதப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் #VandeMataram150’ என்ற தலைப்பில் சமூக ஊடக பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
நாட்டின் மனச்சான்றை மீண்டும் விழிப்படையச்செய்யும் இந்த திருவிழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 1950, ஜனவரி 24 அன்று நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் நிறைவு அமர்வில் வந்தே மாதரம் பாடலை தேசியப் பாடலாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஏற்றுக்கொண்டார் என்றும், இதன் மூலம் தேசத்தின் பெருமை ஏற்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
சுதேசி இல்லாமல் தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பது சாத்தியமில்லை என்று கூறிய திரு அமித் ஷா, வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் சுதேசி ஏற்புக்கு நாட்டு மக்கள் உறுதிமொழி எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187322
***
AD/SMB/AG/RJ
(Release ID: 2187612)
Visitor Counter : 7