பிரதமர் அலுவலகம்
நமது தேசிய பாடலான வந்தே மாதரம் நம்பிக்கை சார்ந்த தொலைநோக்கு பார்வை, தற்சார்பு, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மறுமலர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
07 NOV 2025 2:54PM by PIB Chennai
இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் பாடலான பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய இயற்றிய வந்தே மாதரம் என்ற தேசிய பாடல் குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். வந்தே மாதரம் பாடல் நமது நம்பிக்கை சார்ந்த தொலைநோக்கு பார்வை, தற்சார்பு, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான மறுமலர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாக உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பகிர்ந்துள்ள கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
“வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவையொட்டி மத்திய அமைச்சர் திரு அமித் ஷா எழுதியுள்ள கட்டுரையில் தேசிய பாடலான பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய இயற்றிய இந்த பாடல் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் பாடலாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார். காலனி ஆதிக்கத்துவத்தில் இந்தியா இருந்த இருளான காலத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் மக்களிடையே சுதந்திர போராட்டத்திற்கான எழுச்சியை உருவாக்கும் பாடலாகவும், நாட்டின் கலாச்சார பெருமை மற்றும் நாகரீகத்தின் கலவையாகவும் உள்ளது.
வந்தே மாதரம் பாடல் நமது நம்பிக்கை சார்ந்த தொலைநோக்கு பார்வை, தற்சார்பு, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான மறுமலர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இந்த கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும்”.
***
(Release ID: 2187312 )
SS/SV/RK/RJ
(रिलीज़ आईडी: 2187560)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam