ஆயுஷ்
தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது
Posted On:
07 NOV 2025 12:14PM by PIB Chennai
தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் புற்று நோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக புற்று நோய் பாதிப்பு குறித்து முன் கூட்டியே கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் மக்களிடையே இதுகுறித்த விழிப்புணா்வை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் வாய், கருப்பை, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இத்தகைய சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், கல்வி, முழுமையான உடல் பரிசோதனை, புற்று நோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகளை மத்திய அரசு அதிகரித்து வருகிறது.
புகையிலை பயன்பாடு ஆரோக்கியமில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, எச்பிவி வைரஸ் பாதிப்பு போன்றவை புற்று நோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
மக்களை மையமாக கொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு, ஒருங்கிணைந்த பராமரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த புற்று நோய் பராமரிப்பு மையங்கள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், சமூக விழிப்புணா்வு நிகழச்சிகள் உள்ளி்ட்ட பல்வேறு முன்முயற்சிகளை தமது அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக அவா் தெரிவித்தார். குறைந்த செலவில் முழுமையான மருத்துவ சிகிச்சைகள் ஒவ்வொரு குடிமக்களையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பல வகையான புற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதுடன் சில வகையான புற்று நோய் பாதிப்புக்களை முன் கூட்டியே கண்டறிவதன் மூலம் குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்த போதிலும் நீடித்த சுகாதாரமான வாழ்வியல் முறைகளுக்கான விருப்பங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187212
***
SS/SV/RK/KR
(Release ID: 2187388)
Visitor Counter : 6