தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியின் சிறப்பு அமர்வு சமூக நீதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார் டாக்டர் மன்சுக் மண்டாவியா
प्रविष्टि तिथि:
06 NOV 2025 4:20PM by PIB Chennai
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற உலகளாவிய சமூக நீதி கூட்டமைப்பின் (Global Coalition for Social Justice) அமர்வில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இந்தியாவின் மகத்தான முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
அவர் உலக சமூக முன்னேற்றம் மாநாட்டிற்காக தோஹாவில் இருந்தார். அங்கு நடைபெற்ற நித்தி ஆயோக்கின் சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவில் வறுமையிலிருந்து சுமார் 25 கோடி மக்கள் விடுவிக்கப்பட்டதையும், 64 சதவீதத்திற்கம் அதிகமான மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் புரட்சியால், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வெளிப்படைத் தன்மையுடன் மக்களைச் சென்றடைவதை அமைச்சர் வலியுறுத்தினார். திறன் இந்தியா திட்டம் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மேலும் 3.5 கோடி புதிய முறைசார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2017 முதல் 2023 வரை இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், வேலையின்மை விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 3.2% ஆகக் குறைந்துள்ளதையும் டாக்டர். மாண்டவியா, சுட்டிக்காட்டினார். மகளிர் பணிபுரிவது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு முறையை எடுத்துரைத்த அவர், ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் 7.8 கோடி உறுப்பினர்கள் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தில் 15.8 கோடி பயனாளிகள் உள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் வலிமையாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 31 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்களை உள்ளடக்கிய 'இ-ஷ்ரம்' (e-Shram) தளமும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில், கத்தார் நாட்டின் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பை நிகழ்த்தி, இரு நாடுகளுக்கும் இடையே சமூகப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் திரு. மாண்டவியா ஆலோசித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186981
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2187148)
आगंतुक पटल : 22