பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படையின் விநாடி-வினா நிகழ்ச்சியில் ஜெய்ஸ்ரீ பெரிவால் உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது

Posted On: 06 NOV 2025 10:09AM by PIB Chennai

எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 நவம்பர் 5 அன்று இந்திய கடற்படையின் திங்க் 25 விநாடி-வினா நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நிறைவடைந்தது.  இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். இளைஞர்களிடையே கடல்சார் குறித்த மனப்பான்மையை வளர்க்கும் வகையில் மகாசாகர் என்ற தலைப்பில் இந்த ஆண்டு விநாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த 16 பள்ளிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் முதன்மையான 8 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  ஜெய்ப்பூரில் உள்ள பெரிவால் உயர்நிலைப்பள்ளி, கண்ணூரில் உள்ள பாரதிய வித்யாபவன், ஜெய்ப்பூரில் உள்ள சுபோத் பொது பள்ளி, ஜாம்ஷெட்பூரில் உள்ள சிக்ஷா நிகேதன், சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பால பவன் உயர்நிலைப்பள்ளி, ஜெய்ப்பூரில் உள்ள கேம்ப்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளி, கான்பூரில் உள்ள டாக்டர் வீரேந்திர ஸ்வரூப் கல்வி மையம், சமஸ்திபூரில் உள்ள பிஎம் ஸ்ரீ ஜேஎன்வி பள்ளி ஆகியவை இறுதி சுற்றுக்கு முன்னேறின.  இப்போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ஸ்ரீ பெரிவால் உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. சமஸ்திபூரில் உள்ள பிஎம் ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி 2-ம் இடம் பிடித்தது. இறுதிப்போட்டி இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186818  

***

SS/IR/AG/SH


(Release ID: 2187092) Visitor Counter : 7