பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு நிறுவனங்களுக்கான உலகளாவிய தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அமுல் மற்றும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு அமைப்புக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 05 NOV 2025 10:04PM by PIB Chennai

கூட்டுறவு நிறுவனங்களுக்கான உலகளாவிய தரவரிசையில் முதலாவது மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள  அமுல் மற்றும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு அமைப்புக்கு (ஐஎஃப்எஃப்சிஓ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கூட்டுறவுத்துறை துடிப்புமிக்கது என்றும், பலரது வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இத்துறையை மேலும் ஊக்குவிக்க தங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“அமுல் மற்றும்  ஐஎஃப்எஃப்சிஓ கூட்டுறவு நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். இந்திய கூட்டுறவுத்துறை துடிப்புமிக்கது, பலரது வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் இத்துறையை மேலும் ஊக்குவிக்க எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”

***

(Release ID: 2186778)

SS/IR/AG/KR


(Release ID: 2186847) Visitor Counter : 5