தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பு பிரச்சாரம் 5.0-ஐ அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 04 NOV 2025 7:52PM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் அலுவலக வளாகங்களை அழகுபடுத்துதல் மற்றும் முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல் என்ற முதன்மை நோக்கத்துடன், அக்டோபர் 2 முதல் 31, வரை நடத்தப்பட்ட சிறப்பு பிரச்சாரம் 5.0 செயலாக்கத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.

1272 வெளிப்புற பிரச்சாரங்கள் நடத்தப்பட்டதுடன், 2073 பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

40,381 கிலோ மின்னணு கழிவுகளுடன், மொத்தம் அகற்றப்பட்ட 2,62,391 கிலோ கழிவுகளில் இருந்து 1.37 கோடி வருவாய் கிடைத்தது மற்றும் 77,348 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது. மொத்தம் 174 வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆவண மேலாண்மையின் கீழ், 35,281 இயல் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவற்றில் 11,389 கோப்புகள் நீக்கப்பட்டன. இதேபோல், 1,486 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 289 கோப்புகளுக்கு தீர்வுகாணப்பட்டன.

மொத்தம் 489 பொதுமக்கள் குறைகள், 121 பொதுமக்கள் குறைகள் மீதான மேல்முறையீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 19 பரிந்துரைகள், 2 மாநில அரசுகளின்பரிந்துரைகள் மற்றும் 2 பிரதமர் அலுவலக பரிந்துரைகள் தீர்க்கப்பட்டன.

தூய்மை பற்றிய செய்தியைப் பரப்புவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும் அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம்  விளம்பரப்படுத்தப்பட்டது.

பிரச்சாரத்தின் முன்னேற்றத்தை செயலாளர் ஸ்ரீ சஞ்சய் ஜாஜு வாரந்தோறும் தொடர்ந்து ஆய்வு செய்தார். அமைச்சகத்தின் முதன்மை அதிகாரி திரு ஆர்.கே. ஜெனா, ஒவ்வொரு ஊடகப் பிரிவின் அனைத்து முதன்மை அதிகாரிகளுடனும் அன்றாடம் முன்னேற்றத்தைக் கண்காணித்தார். தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், அமைச்சகத்தின் அலுவலகங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும்  வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:             https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186421

***

AD/RB/RJ


(Release ID: 2186497) Visitor Counter : 6